இது நமது கிராமங்களின் கதை
2015ல் தொடங்கப்பட்ட இண்டிக் அகாடமி இந்திய நாகரிகத்தின் சிந்தனைகள், அடையாளம் மற்றும் மதிப்புகளை பேணி, பாதுகாத்து, ஊக்குவிக்கும் நோக்கங்களுடன் செயல்படும் ஒரு அமைப்பு. இப்பணியில் கடந்த சில ஆண்டுகளில் கலாச்சாரம் குறித்த அறிவுசார் சிந்தனைகளை வெளிப்படுத்தவும் அத்துறையில் தலைவர்களை உருவாக்கவும் இண்டிக் புக் கிளப்பை உருவாக்கியது உட்பட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மேலும் நமது பாரம்பரியத்தைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தனி நபர்களுக்கும் அமைப்புக்களுக்கும் நிதி உதவியும் செய்து வருகிறது. அவற்றுள் அ) சின்மயா விஷ்வ வித்யா பீடம் நடத்திய மாநாடு ஆ) ஓம் சாரிட்டபிள் டிரஸ்ட்டால் நடத்தப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான வேத பாட போட்டி இ) சத்சம்ஹிதா அமைப்பால் நடத்தப்பட்ட வேதாங்க வகுப்புகள் ஆகிய நிகழ்வுகளுக்கு உதவியதும் ரிக் வேதத்தை டிஜிடைஸ் செய்தது மற்றும் கும்பமேளாவைப் பற்றிய ஆவணப்படம் தயாரித்தும் அடங்கும். சாஸ்திரங்களைக் கற்கும் 40 மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டது.
இந்த காலகட்டத்தில் பல தன்னார்வலர்கள் அவர்களது நேரத்தையும், சில சமயங்களில் நிதியையும் இண்டிக் அகாடமிக்காக கொடுத்து உதவியுள்ளனர். சில சமயங்களில் Indic Academy மூலமாக குறிப்பிட்ட அளவு நிதி பெற்ற பின் இத்தகைய தன்னார்வலர்கள் சமூக வலைதளங்களில் முன் வைத்த வேண்டுகோளுக்கு நல்ல பலன் இருந்தது. இதனை நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொள்ளும் விதமான ஒரு முயற்சியில் கடந்த ஆகஸ்ட் மாதம் இண்டிக் ஆக்டிவிஸ்ட் என்ற அமைப்பு இண்டிக் அகாடமி மற்றும் எமது தன்னார்வலர்களின் ஒருங்கிணைந்த வலிமையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள ஆரம்பிக்கப்பட்டது . இண்டிக் அகாடமியின் 10 லட்சம் நிதி மற்றும் அதே அளவிலான மற்றொரு புரவலரின் நன்கொடையை மூலமாகக் கொண்டு தனிநபர்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து வரும் திட்டங்களை மூலதனமாகக் கொண்டு தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் முன்வைக்கும் திட்டங்களை அடையாளம் கண்டு அவர்களது பின்னணி மற்றும் செயல்பாடு குறித்து சிரத்தையாக சோதித்து , தேவைப்படும் போது அவர்களுக்கு வழிகாட்டி , அவர்களது தேவைகளை பூர்த்தி செய்ய ஓரளவு பங்களித்து இறுதியாக இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டுள்ள மேலும் பல அறிவுசார் சிந்தனையாளர்களை சென்றடையும் முயற்சியில் இறங்கியுள்ளது. சில மாதங்களில் முழுக்க முழுக்க தொடர்ச்சியாக தேவைகளையும் அவற்றிற்கான நிதி திரட்டும் செயல் முறையையும் வெளிப்படையாக அறிவிக்கும் ஒரு , எளிமையான கிரவுட் சோர்சிங் தளத்துக்கு மாறும் நடைமுறையில் இண்டிக் ஆக்டிவிஸ்ட் உள்ளது.
இண்டிக் அகாடமிக்குள் இண்டிக் ஆக்டிவிஸ்ட்ஸ் ஒரு தனி வாரியமாக இருக்கும். திருமதி.யோகினி தேஷ்பாண்டே, திருமதி.நூபுர் ஷர்மா, திரு.D.V.ஸ்ரீதரன், திரு.ஸ்ரீநிவாஸ் முதுகு,திரு.பிரமோத் குமார், திரு.C.சுரேந்திரநாத் மற்றும் இண்டிக் அகாடமியின் பிரதிநிதியாக திரு.ஸ்ரீநிவாஸ் உடுமுடி ஆகியோர் இவ்வாரியத்தின் தற்போதைய உறுப்பினர்கள்.
இண்டிக் ஆக்டிவிஸ்ட்டின் செயல்பாடு மற்றும் நோக்கம் குறித்து Dr.யோகினி தேஷ்பாண்டே விவரிக்கும் போது “நமது பாரம்பரியத்தைப் பேணி காக்கவும் ஊக்குவிக்கவும் அயராது பாடுபடும் கலாச்சார ஆர்வலர்களையும் , அமைப்புகளையும் வழிகாட்டி , நிதியுதவி செய்து ஊக்குவிப்பதே Indic Activistன் நோக்கம்.இத்தகைய அமைப்புக்கள் மற்றும் நபர்களை நிர்வாக ரீதியாகவும் , பண ரீதியாகவும் முன்னேற்றுவது ஒரு சமூகத்தின் பொறுப்பு என நினைக்கிறோம் . உதவி தேவைப்படும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு தங்களது உதவிக் கரங்களை நீட்டவும் இச்சமூகம் நம் பாரம்பரியத்தின் மீது அக்கறை கொண்டுள்ளது என்பதை தெரியப்படுத்தவும் உதவும் ஊடகமாக இருக்க முயற்சிப்பதே இண்டிக் ஆக்டிவிஸ்ட்டின் நோக்கம்” என்று கூறினார்.
இப்பணியின் அடுத்த படிகள் பின்வருமாறு :
1 . நம் பாரம்பரியத்தை பேணி , காத்து , ஊக்குவிக்கும் அமைப்புக்கள் மற்றும் தன்னார்வலர்களை அடையாளம் கண்டு தரவுத்தளம் உருவாக்குவது .
2 . வரையறுக்கப்பட்ட அளவீடுகளைப் பொறுத்து அவர்களை மதிப்பிடுதல் .
3 . சிறந்த மேலாண்மை / நடைமுறைகளில் பயிற்சி அளிப்பது.
4 . அவர்களது தேவையில் 10 % அளவுக்கு முதலீடு செய்வது .
5 . அவர்களுக்காக அவர்கள் சார்பாக நிதி திரட்டும் பிரச்சாரங்களில் ஈடுபடுவது .
6 . திரட்டப்படும் நிதி குறித்தான தகவல்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் அறிவிக்கப்படுவதை உறுதி செய்யும் வழிமுறைகளை ஏற்படுத்துவது
7 . வெளிப்படைத்தன்மை மற்றும் அதிக அளவிலான பங்களிப்பாளர்களைச் சென்றடையும் வகையில் ஒரு தொழில்நுட்ப தளம் அமைப்பது
தற்போது இண்டிக் ஆக்டிவிஸ்ட் வாரியம் திருநெல்வேலியில் உள்ள ஒரு பள்ளிக்கு நிதியுதவி வேண்டி முதல் கோரிக்கையை முன் வைக்கிறது.
இது நமது கிராமங்களின் கதை. ஒரு சில நல்ல உள்ளங்கள் நமது குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்க பல தடங்கல்களுக்கிடையே போராடுவதைப் பற்றிய பதிவு.
திருநெல்வேலி மாவட்டத்தின் ஆலங்குளம் தாலுகாவில் உள்ள மூன்றாயிரம் குடும்பங்கள் வாழும் ஒரு கிராமம் மாயமான்குறிச்சி. பெரிதாக நீராதாரங்கள் எதுவும் இல்லாததால் விவசாயத்திற்கு கண்மாய், குளங்களை நம்பி இருக்க வேண்டிய நிலை. எனவே வருடத்திற்கு ஒன்றிரண்டு பருவங்கள் மட்டுமே விளைச்சல் உண்டு.
கிராமத்தாரில் பெரும்பாலானோர் சிறிய அளவில் சொந்த நிலம் வைத்திருக்கும் விவசாயிகளாகவோ அல்லது விவசாயக் கூலிகளாகவோ உள்ளனர். விவசாய வேலை இல்லாத நாட்களில் ஆண்கள் தினக் கூலிகளாக வேலைக்குச் செல்கின்றனர். பீடி சுற்றுவதும் இக்கிராமத்தார் கண்ணியமாக வாழ உதவுகிறது. இக்கிராமத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பின் கீழ் வரும் தேவர் மற்றும் தென் தமிழகத்தின் முதன்மையான பட்டியலிடப்பட்ட சாதியான தேவேந்திர குல வெள்ளாளர் சமூக மக்களைக் கொண்டது. இன்னும் பிற பட்டியலிடப்பட்ட சாதிகளான ஆதி திராவிட மற்றும் அருந்ததியர் குல மக்களும் இங்கு வாழ்கின்றனர். மேலும் கணிசமான அளவில் சைவ வெள்ளாளர்களும் பத்து அந்தண குடும்பங்களும் இங்கு வசிக்கின்றனர். இதில் பெரும்பாலான உயர்சாதிக்காரர்கள் அவர்களது குழந்தைகளை உயர்நிலைப் பள்ளிக் கல்விக்கு வேறு எங்காவது அனுப்பிவிடும் நிலையில் உள்ளூர்ப் பள்ளியைச் சார்ந்து இருப்பது தினக்கூலிகளின் பிள்ளைகளே.
3 கி.மீ சுற்றளவிற்கு மாயமான் குறிச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கான ஒரே பள்ளி இந்து மேல்நிலைப்பள்ளி. தமிழ் வழிக்கல்வி பயிற்றுவிக்கும் இப்பள்ளியில் 700 பிள்ளைகள் படிக்கிறார்கள். அவர்களுக்கு கற்பிக்க 30 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். காந்தியவாதிகளான திரு.நரசிம்ம ஐயர் மற்றும் திரு.முத்துச்சாமி அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட பள்ளி இது. அவர்களுக்குப் பிறகு திரு.முத்துச்சாமி அவர்களது குடும்பம் பள்ளியைத் தொடர்ந்து நடத்தி வருகின்றது. தற்போது முத்துச்சாமி அவர்களது மகன் திரு.காமராஜ் மற்றும் பேரன் திரு.முத்துச்செல்வன் ஆகியோர் திறம்பட நிர்வகித்து வருகின்றனர்.
தமிழக அரசு 1993ல் நிதிநிலையைக் காரணம் காட்டி அந்த ஆண்டிற்குப் பிறகு தொடங்கப்பட்ட வகுப்புகளுக்கான அரசு நிதி உதவிபெறும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதை நிறுத்திவிட்டது. எனவே 1993ம் ஆண்டுக்குப் பின் இந்து மேல்நிலைப்பள்ளியில் தொடங்கப்பட்ட 8 முதல் 12ஆம் வகுப்புக்கான ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க அரசு நிதியுதவி கிடைப்பதில்லை. ஓரிரு கிலோமீட்டர்களுக்கு மேல் பயணித்து பள்ளி செல்ல வேண்டிய கட்டாயம் வரும்போது பெண் குழந்தைகள் இடைநிற்பதால் 8-12 வகுப்புகள் இப்பள்ளியில் தொடர்வது கட்டாயமாகிறது. இவ்வாறு இடைநிற்கக் கூடிய பிள்ளைகள் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலிடப்பட்ட சமூகங்களைச் சார்ந்த பிள்ளைகளாக இருப்பார்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
ஒரு வருடத்திற்கு 8-10ஆம் வகுப்புகளுக்கு ₹400-₹500ம் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பாடங்களைப் பொறுத்து ₹2500 மற்றும் ₹3500ம் பள்ளிக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஐந்தாம் வகுப்பு வரை உள்ள சிறுவர், சிறுமியருக்கு இலவச பள்ளி வாகனச் சேவையும் வழங்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு மாதமும் ₹70,000 அளவுக்கு பள்ளியின் நிதிநிலையில் துண்டு விழுகிறது. இதற்கிடையில் 1978ல் கட்டப்பட்ட இந்த தொடக்கப்பள்ளிக் கட்டடம் புதுப்பிக்கப்பட வேண்டியுள்ளது.
பிற தனியார் பள்ளிகள் ஆங்கில வழியில் கற்பிப்பவையாகவோ, அவர்களுக்கு ₹10,000/15,000 வருட பள்ளிக் கட்டணமாக வசூலிக்கலாம், அல்லது திருநெல்வேலி மறைமாவட்ட சங்க டிரஸ்ட், TDTA(தென் தமிழகத்தில் 350 பள்ளிகளை நிர்வகிக்கும் ஆசியாவிலேயே பெரிய இந்த மறைமாவட்டம், CSI சர்ச்சின் கீழ் செயல்படுகிறது) கீழ் வருபவையாகவோ உள்ளன. மாயமான் குறிச்சி மக்களில் கிட்டத்தட்ட அனைவருமே இந்துக்கள் என்பதால் இங்கு பள்ளி நிறுவ TDTAவிற்கு போதுமான அளவு ஊக்கம்/ஊக்கத்தொகை அளிக்கப்படாமல் இருக்கலாம். எனவே இந்து மேல்நிலைப்பள்ளியை காப்பாற்ற வேண்டியது அவசியமாகிறது.
2010ஆம் ஆண்டு திமுக அரசு 1993க்குப் பின் ஆரம்பிக்கப்பட்ட வகுப்புகளுக்கான ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால் 2011ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின் இதைப் பற்றிய பேச்சே இல்லை. எனவே நாம் தற்போதைய அரசை கிராமப்புறங்களில் உள்ள தமிழ் வழிக்கல்வி பயிற்றுவிக்கும் பள்ளிகளுக்கு நிதியளிக்குமாறு கோரலாம். எதிர்க்கட்சியினரையும் இவ்விஷயத்தைப் பற்றிப் பேசுமாறும் தீர்வு காணுமாறும் கேட்டுக் கொள்ளலாம். சுற்றுச்சுவர் எழுப்பத் தேவைப்படும் ₹2.4 லட்சம் மற்றும் தொடக்கப்பள்ளியை சீரமைக்கத் தேவையான ₹24 லட்சம் தொகையை Crowdfunding மூலம் சேகரித்துக் கொடுப்பது உதவியாக இருக்கும்.
எங்களது முயற்சி
இப்பள்ளிக்கு அடுத்த கல்வி ஆண்டு வரை ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கவும் மற்றும் பள்ளிக்கு காம்பவுண்டு சுவர் கட்டி கொள்வதற்க்கும் ரூ. 4.4 லக்ஷம் தேவை படுகிறது
இண்டிக் ஆக்டிவிஸ்ட் அமைப்பு இப்பள்ளிக்கு இரு வகை உதவி புரிகிறது – தம் உறுப்பினர்களின் சொந்த தொகையும் உதவியாக அளித்து சமூக வலை தளங்கள் மூலமாக நிதி திரட்டி கொடுப்பது.
மேலும் அரசாங்கத்தினை அணுகி அரசு உதவி கிடைக்க ஆவன செய்வது.
இது வரை இண்டிக் ஆக்டிவிஸ்ட் சார்பாக ஒரு லக்ஷம் தொகை வழங்க பட்டுள்ளது. மீத தொகையை இக்கட்டுரை மூலம் பொது மக்களுக்கு இந்த தேவையை எடுத்து சென்று பள்ளிக்கு ஈட்டி தரும் முயற்சியும் நடை பெறுகிறது. உதவ முடிந்தவர்கள் அவ்வாறு செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்
பள்ளி விவரங்கள்
Muthusamy Educational Trust
Phone: 04633-270488
Bank: Tamilnad Mercantile Bank Ltd
Branch: Alangulam, Tirunelveli
A/C No: 040100050312057
IFSC: TMBL0000040
மின்னஞ்சல் : hinduschoolmayamankurichi@gmail.com
கைபேசி எண் மற்றும் WhatsApp: +91-9597232224
குறிப்பு
IAN – இண்டிக் ஆக்டிவிஸ்ட் நெட்வொர்க் எனப்படும் அமைப்பு ஒரு அதிகாரப்பூர்வ தொண்டு நிறுவனமோ அமைப்போ அல்ல .
சில சமூக பிரச்சனைகளின் மீது நமது சமுதாயத்தின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் இவ்வமைப்பு ஈடுபடுகிறது. IANஓ அதன் உறுப்பினர்களோ நிதி அல்லது நன்கொடை பெறுவதற்காக வங்கிக்கணக்கோ வேறு நிதி சேமிக்கும் வழி வகைகளோ வைத்திருக்கவில்லை. இவ்வமைப்பால் உதவப்படும் நிறுவனங்களுக்கும் IAN இன் உறுப்பினர்களுக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. இந்நிறுவனங்களின் பங்குதாரர் அல்லது அறங்காவலர் பதவிகளில் IAN இன் உறுப்பினர்கள் யாரும் இல்லை. இந்நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் நன்கொடை தொகையால் IANஇன் உறுப்பினர்கள் யாருக்கும் எவ்விதமான பலனும் இல்லை.
இதற்காக பெறப்படும் நன்கொடைகளுக்கு கணக்கு காட்ட வேண்டிய பொறுப்போ அதிகாரமோ IAN மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு இல்லை.