Close

ஜல்லிக்கட்டில் ஒரு பெரும் விளையாட்டு

ஜல்லிக்கட்டில் ஒரு பெரும் விளையாட்டு

[contextly_sidebar id=”mYA9Qz8wSkFZl1UrTrCvdn8qoIQSVZ9w”]

This article has been translated from English by Vaijayanthi Chakravarthy

சில மாதங்களுக்கு முன்பு இந்து  மத விழாக்களையும், அமைப்புகளையும் முறையாக தாக்க முயற்சித்துவரும் ப்ராஜெக்ட் தெசலோனிகா எனும் கிருத்துவ மதப்பிரச்சாரம் குறித்து நான் எழுதியிருந்தேன்.  தன்னுடைய அதிகாரத்தை தமிழ் நாட்டில் ஆழமாக நிலை நாட்டியிருக்கும்  சர்ச்சுக்கு அந்த மாநிலம் பெரும் போர்க்களம். ஜல்லிக்கட்டிற்காக நடக்கும் போராட்டத்தை அந்தப் பின்னணியில் பார்க்க வேண்டும்.

ப்ராஜெக்ட் தெசலோனிகா என்றால் என்ன?

“ப்ராஜெக்ட் தெசலோனிகா இந்து கலாச்சாரத்தின் ஆணிவேராக இருக்கும்  இந்துக்களை மத மாற்றம் மூலமாக அவர்களின் திருவிழாக்கள், மரபுகள், மற்றும் செயல்பாடுகளைக் குறைக்க திட்டமிட்டுள்ளது …. விநாயகர் ஊர்வலம், ஜெகன்னாத் தேரோட்டம், கும்பமேளா கொண்டாட்டங்களைக் குறைக்க சுற்றுச்சூழல் குழுக்கள் மூலமாகக்  குரல் எழுப்புகிறது…”  [1]

பாரம்பரியத்  திருவிழாக்கள் ஒரு சமூகத்தில் மக்களை அதன் மரபுகளுடன் பின்னிப்பிணைக்கும் கருவிகள்.  அதனால்தான் எப்பொழுதும் கிருத்துவ அதிகாரத்  தாக்குதல்கள் பாரம்பரிய விழாக்களின் மீது விழுந்திருக்கிறது. சுருக்கமாக இப்பொழுது ஜல்லிக்கட்டுத்  தடையின் காலவரிசையைக் காண்போம்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் 2006ஆம் ஆண்டு ஜல்லிகட்டுத் தடை யாரும் கோராமலேயே, வேறு ஒரு அதற்குத் தொடர்பில்லாத வழக்கு  விசாரணையின் போது  தடை செய்தார்.

தி ஹிந்து நாளிதழ் வெளியிட்ட  வழக்கறிஞர் ஷாஜி செல்லன் அவர்களுடனான நேர்காணலிலிருந்து [2] – “வழக்கறிஞர்  தான் இராமநாதபுரம் மாவட்டத்திலிருக்கும் தனியன்கூட்டம் கிராமத்தில் ரேக்ளா ரேஸ் நடத்தக்கோரி மட்டும் தொடர்ந்த ரிட் மனு விசாரணையின்போது  தற்பொழுது  உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்கும் ஆர்.பானுமதி அவர்கள் தாமாகவே வழக்கை விரிவுபடுத்தி ரேக்ளா ரேஸ், காளை பந்தயம், மற்றும் ஜல்லிக்கட்டைத்  தடை செய்தார் என சுட்டிக்காட்டினார்.

…உயர்நீதிமன்றம் ஏற்கனவே அத்தகைய மனுக்களை அனுமதித்து சில மாவட்டங்களில் ரேக்ளா ரேஸ் நடத்தவும் அனுமதி வழங்கியிருந்தது. அதிர்ச்சிகரமாக நீதிபதி பானுமதி அவர்கள் ஒரு வித்தியாசமான அணுகுமுறையை மேற்கொண்டு மிருகவதைத்  தடை சட்டத்திற்கு முரணாக அவ்வாறு போட்டிகள் எப்படி நடத்திட முடியும் என்று கேட்டார்.”

தாமாகவே ஜல்லிக்கட்டை வழக்கில் சேர்த்தது மட்டுமல்லாமல், பல விழாக்களை ஒன்றாகத்  தடை செய்யக்கூடாது என்னும் முந்தைய தீர்ப்பைத்  தலைகீழாக மாற்றினார். எந்தவித முன்னறிவிப்பு நோட்டீசுமின்றி, ஜல்லிக்கட்டு  ஆதரவாளர்கள் யாரும் மனு செய்யவும் வாய்ப்பில்லாமல் ஒரே நாளில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

மதிய உணவு இடைவேளை முடிந்தவுடன் வழக்கு அனுமதிக்கப்பட்ட அன்றே யாருக்கும் நோட்டீஸ் கொடுக்காமல் தீர்ப்பு வழங்கப்பட்டது  என்கிறார் செல்லன்.

அந்த  நீதிபதி யார்? எந்த வழக்குமின்றி இப்படி ஒரு தீர்ப்பை எப்படித்  தயாரித்தார்? அந்த நீதிபதி ஆர்.பானுமதி ஒரு கிருத்துவர் என்கிறது விஜில் ஆன்லைன் வலைதளம் [3]. அவரின் வேலைப்பாட்டில்  பாரபட்சமான கண்ணோட்டம் இல்லாவிட்டால் அவருடைய மதம் மட்டுமே பாரபட்சத்திற்கான சான்று ஆகாது.

ஐந்தாம் நூற்றாண்டு சிதம்பரம் கோவில் வழக்கில், பரம்பரை கோவில் பூசாரிகளான  பொது தீட்சிதர்களின் கோவில் நிர்வாக உரிமை மறுப்பு விவகாரத்தில்அவர்களுக்கு எதிராக தீர்ப்பு சொன்னவர் நீதிபதி பானுமதி.

அரசாங்கம் ஐந்தாம் நூற்றாண்டு சிதம்பரம் கோவில் நிர்வாகத்தை பொது  தீட்சிதர்களிடமிருந்து பறித்த வழக்கின் அரசாங்க நடவடிக்கைக்கு ஆதரவான பிப்ரவரி 2010 தீர்ப்பில்கோவில் நிர்வாகம் என்பது முற்றிலும் மதச்சார்பற்ற நடவடிக்கை, மதச்சார்பு குலைக்கும் வகையிலோ, நிர்வாக சீர்கேடு இருந்தாலோ அரசாங்கம் தலையிடலாம்.’ அனால் அந்தத் தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.  [4]

சிதம்பரம் கோவில் வழக்கில் நீதிபதி பானுமதி அவர்களின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிராகரிக்க ஆதாரம் இருந்தது. இன்னொரு வழக்கில் ஒரு இந்து சாதுவிற்கு எதிராக மிகவும் கடுமையான தீர்ப்பை வழங்கினார் நீதிபதி பானுமதி.

தண்டனைக்காலம் முடிவதற்குமுன் விடுதலையோ, அல்லது வேறெந்த சலுகைகளோ எதிர்பார்க்க முடியாது என்று கூறி, அவருடைய இரண்டாவது தண்டனை க் காலத்தை முதல் தண்டனைக்காலம் முடிந்த பிறகு மேற்கொள்ளவேண்டும் என  தெளிவாக்கினார். அந்த முதியவர் காலம் முழுவதும் சிறையிலேயே கழிக்க வேண்டும் என்பதே  திட்டம். பிப்ரவரி 2011இல் அவர் சிறைச்சாலையிலேயே  காலமானார்.”

ஒரு இந்து குழந்தையை அதன் தாய், தந்தை இறந்த பிறகு  ஒரு தாத்தா, பாட்டி கிருத்துவ மதத்திற்கு மாற்றும் முயற்சிக்கு எதிராக அதன் மற்றொரு தாத்தா, பாட்டி தங்கள் பாதுகாப்பில் கொண்டு வரக்கோரிய மனுவை நிராகரித்தார்.[5]

நீதிபதி பானுமதி அவர்களின் தீர்ப்புகளுக்கு எந்த ஒரு உள் நோக்கமும் கற்பிக்காமல் பார்த்தாலும் கோரிக்கையே இல்லாமல் ஜல்லிக்கட்டைத் தடை செய்தது, ப்ராஜெக்ட் தெசலோனிகா காட்டும்  இந்து திருவிழாக்கள் மற்றும் நிறுவனங்களின் மீதான சகிப்பின்மையை பிரதிபலிக்கிறது.

சென்னை உயர்நீதிமன்றம் 2009 செய்த தடையை எதிர்கொள்ள மாற்று உபாயமாக தமிழக அரசு ஒரு ஆணை பிறப்பித்தது, அதில் காங்கிரஸ் கட்சியின் ஈடுபாடு சந்தேகத்திற்குரியது. 2011ஆம் ஆண்டு காங்கிரஸ் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஜல்லிக்கட்டைக் கருத்தில் கொண்டே விளையாட்டில் காளைகளை பயன்படுத்துவதை தடை செய்தார்.

உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுத் தீர்ப்பு ஜெயராம் ரமேஷ் அவர்களின் முடிவை நிலை நாட்டியிருக்கிறது  என்கிறார் ஹியூமேன் சொசைட்டி இன்டர்நேஷனல் தலைவர் நந்திதா கிருஷ்ணா. ‘2011ஆம் ஆண்டு ஜெயராம் ரமேஷ் அவர்கள் சுற்றுச்சூழல் அமைச்சராக விளையாட்டில் காளைகளை தடை செய்ததற்கு நான் குறிப்பாக நன்றி சொல்லவேண்டும்‘. [6]”

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருக்கும் காலத்திலேயே, உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டை முற்றிலுமாக தடை செய்து  2014 ஆண்டு ஆணையிட்டது. [7]. மிகவும் காலதாமதமாக விழித்துக்கொண்ட ப.ஜ.க அரசு 2016 ஜனவரியில் ஜெயராம் ரமேஷ் கொண்டு வந்த ஆணையை மாற்றி ஜல்லிக்கட்டு நடக்கும் விதமாக திருத்தம் வெளியிட்டது. 50,000 வழக்குகள் நிலுவையில், அதிலும் 1000 வழக்குகள் பத்தாண்டுக்கும் மேலாக நிலுவையில் [8] உள்ள நிலையில் உச்சநீதிமன்றம் காளைகளை அதன் சொந்தக்காரர்களிடமிருந்து அதிவேகமாகக் காப்பாற்ற ப.ஜ.க அரசு ஆணையைத் தடை செய்தது.

மே 2016, தமிழக தேர்தல் அறிக்கையில், மதமாற்ற சக்திகளின் ஆதரவைக் கருத்தில் கொண்டாதாலோ என்னவோ காங்கிரஸ் ஜல்லிக்கட்டுத் தடையை நிலைநிறுத்துவோம் என அறிவித்தது.[9]

இன்று ஜல்லிக்கட்டுத் தடைக்காக நரேந்திர மோடி அரசை விமர்சிக்கும் காங்கிரஸ், தமிழக தேர்தல் அறிக்கையில் ஜல்லிக்கட்டைத் தடை செய்வோம் என்று கூறியது. “ஜல்லிக்கட்டுத் தடையை  ஆதரிக்கும் கட்சி,” என்றது காங்கிரஸ் அறிக்கை.

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தல் 2016: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்டது, ஜல்லிக்கட்டுத் தடை செய்ய உறுதி,” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் வெளியிட்ட அறிக்கை குறித்த செய்தித் தலைப்பாக நாளிதழ்கள் வெளியிட்டன.

செகந்திராபாத்தை சேர்ந்த ஹியூமேன் சொசைட்டி இன்டர்நேஷனல் எனும் பொதுநல அமைப்பின் நிர்வாக இயக்குனர் என்.ஜீ.ஜெயசிம்ஹாவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எழுதிய கடிதத்தில் எருது சண்டை தடையை ஆதரிப்பதாகத் தெரிவித்தார். “ஹியூமேன் சொசைட்டி இந்தியா ஒரு  உயர்ந்த நோக்கைக்  கொண்டது, ஒரு கொடுமையான பொழுதுபோக்கை அளிக்கும் எருது சண்டைகளை ஊக்குவிக்கக் கூடாது. உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.” என்று மன்மோகன் சிங் டிசம்பர் 15, 2015 கடிதத்தில் கூறினார்.

ஜல்லிக்கட்டுத் தடையை ஆதரிக்கும் பீட்டா (PETA),  ஹியூமேன் சொசைட்டி இன்டர்நேஷனல் இரண்டுமே வெளிநாட்டிலிருந்து நிதி பெரும் அமைப்புகளாகும்.

ஜல்லிக்கட்டிற்கு எதிராக வழக்கை நடத்திய காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங்க்வி கொடூர நோக்கத்துடன் [10] நடத்தப்படும் விளையாட்டு என்று வாதாடி ஜூலை 2016இல் உச்சநீதிமன்றத் தடையை மீண்டும் உறுதிப்படுத்த  வித்திட்டார்.

இதிலிருந்து எழும் மற்றும் சில கேள்விகள்

இதில் காங்கிரஸ் கட்சியின் ஈடுபாடு மட்டுமல்லாமல், நீதிமன்றங்களின் பங்கு, மற்றும் நீதிமன்றம் வெளிநாட்டிலிருந்து நிதி பெரும் பொது நல நிறுவனங்களுக்கிடையேயான  கூட்டு, ஆய்வுசெய்யப்பட வேண்டும். உச்ச நீதிமன்ற நீதிபதி கே.ஸ்.ராதாகிருஷ்ணன் 2014ஆம் ஆண்டு பீட்டாவின் அந்த ஆண்டின் சிறந்த மனிதர் விருதைப் பெற்றார்.

தீர்ப்பில் உபயோகப்படுத்தியிருக்கும் சொற்களையும் பார்ப்போம், அதிலும் சில பாடங்கள் உள்ளன [11]:”ஆதாம் ஏவாள் காலத்திலிருந்து மனித குலத்திற்கு தொண்டு செய்து வரும் சர்வதேச சமூகமே  தங்கள் உரிமைகளை இத்தனை நாட்கள் அடையாளம் கண்டுகொள்ளாமல் இருந்ததற்கு தலைகுனிய வேண்டும்.”

முதலில் உச்ச நீதிமன்றம் ஒரு ஆங்கிலேய காலனித்துவ அமைப்பு என்பதை  மனதில் கொள்ள வேண்டும். இங்கிலாந்தின் பொதுச்சட்டம் நூற்றாண்டுகளாக தொடரும் ஆங்கிலேய மரபுகளை அடிப்படையாகக் கொண்டது, ஆனால் இந்திய அரசியலமைப்போ, சட்டங்களோ அதன் மரபுகளைச் சார்ந்தது அல்ல. சொல்லப்போனால் அதற்கு எதிர்மறையானதே. உச்சநீதிமன்ற  தீர்ப்புக்கள் எல்லாம் ஆங்கிலத்தில்தான் எழுதப்படுகிறது. பத்து  விழுக்காட்டிற்கும் குறைவான மக்களே அறிந்திருக்கும் ஒரு மொழியில், அதிகம் புலமையில்லாத ஒரு மொழியில் எழுதப்படுவது ஒரு பெரும் அநியாயம். அது இந்திய மரபுகளை காலனித்துவ கண்ணோட்டத்துடன் பார்க்கிறது. ஆகவே “உரிமைகள்” என வெளிநாட்டு நிதி பெரும் பொது நல அமைப்புகளின் வாதங்களுக்கு எளிய இரையாகிவிடுகிறது.

இரண்டாவது, மதமாற்றம் எனும் போரில் (conversion war hyperlink) இந்து விழாக்களையும், மரபுகளையும் தாக்குவது எவ்வளவு முக்கியம் என்று புரிந்து கொள்ள வேண்டும். மேலும் புனித நூல்களை மையமாகக்  கொண்ட, சர்ச் மற்றும் மசூதியை சூழ்ந்து திரளும்,   ஒரு தெய்வத்தை சார்ந்தவர், சாராதவர் எனும் வைராக்கியமுடைய மதத்தினரைப்போல், இந்திய மரபை சார்ந்தவர்களை இணைக்க ஒரு கருவி  இல்லை. இங்கு மரபுகளை இணைக்க ஒரே வழி, திருவிழாக்கள், சடங்குகள் – இந்தியா  முழுக்க அவை வெவ்வேறு வகையாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ் நாட்டில் பொங்கல் என்றால், மற்றொரு இடத்தில்  அது  லோதி, மற்றுமொரு இடத்தில்  மகர சங்கராந்தி. திருவிழாக்களை தாக்குவது அந்த இணைப்பை முறித்து ஒரு வேரற்ற மரமாக இருக்கும் சமுதாயத்தை மதமாற்ற போரில் சுலபமாகத் தாக்கும் யுக்தியாகும்.

மூன்றாவது, ஜல்லிக்கட்டு ஒரு வீரவிளையாட்டு மட்டுமல்ல, அது நாட்டு மாடுகளை பராமரிக்கும் ஒரு முறை, காளைகளை மதித்து அவை படுகொலை செய்யப்படாமல் காப்பாற்றும் கட்டமைப்பு. ஜல்லிக்கட்டு தடை என்பது மிருக நலன் என்னும் போர்வையில் நாட்டு இனங்களை அழிக்கும் என்பதே நிஜம். உரிமை எனும் மேற்கத்திய ஒருதலைப்பட்ச வாதம் இயற்கையோடு இணைந்திருக்கும்  இசைவான இந்திய வாழ்க்கை முறையிலிருந்து மாறுபட்டது,  மேற்கத்திய வாதத்தைச் சார்ந்த போராட்டம் அதை அழிக்கும். அதை விளக்கும் ஒரு உரையாடலை இங்கே  காணலாம்.

பீட்டாவைப் பொறுத்த வரையில் கன்றிறைச்சி தின்னும் போப் பிரான்சிஸ் அதன் “ஆண்டின் சிறந்த மனிதர்” என கவுரவிக்கப்பட்டார் என்பதே  போதும்.

நன்றி – @a_r_j_u_n மற்றும்  @vivekbabaji

Feature Image Credit:http://www.maduraitravelclub.com

Disclaimer: The facts and opinions expressed within this article are the personal opinions of the author. IndiaFacts does not assume any responsibility or liability for the accuracy, completeness, suitability, or validity of any information in this article.

Sankrant Sanu

Sankrant Sanu is an entrepreneur, author and researcher based in Seattle and Gurgaon. His essays in the book "Invading the Sacred" contested Western academic writing on Hinduism. He is a graduate of IIT Kanpur and the University of Texas and holds six technology patents. His latest book is "The English Medium Myth." He blogs at sankrant.org .